திருப்பத்துார் டவுன் - Tirupathur Town

திருப்பத்தூரில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் கரும்பு விவசாயிகள் கூறுகையில், கரும்பு வெட்டுக்கூலியை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். கரும்பு விலை உயர்ந்த வேண்டும் என்று விவசாயக் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்!  விவசாயக் கூட்டத்திற்கு வரும் அதிகாரிகள் அனைத்து தகவல்களையும் சரியாகக் கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. இந்த விவசாயிகள் கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை எடுத்துக் கூறினர்.  இதுகுறித்து அதிகாரியிடம் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி கேட்டபோது, அதிகாரிகள் பதில் சொல்ல தடுமாறினர். அதன் காரணமாக, இனிமே விவசாயக் குறைதீர்வு கூட்டத்திற்கு வரும்போது அதிகாரிகள் முறையான தகவல்களை எடுத்து வர வேண்டும் என எச்சரித்தார். விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கரும்பு விவசாயிகள் கூறுகையில், கரும்பு வெட்டுக்கூலியை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும், கரும்பு விலை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా