திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு அடுத்த கல்லுகுட்டை பகுதியைச் சேர்ந்த ரஜினி மனைவி மஞ்சுளா (வயது 32). இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வயிற்றுவலி அதிகமாக இருந்த மஞ்சுளா வீட்டில் வைத்திருந்த விஷம் குடித்து திங்கட்கிழமை நேற்று மாலை 6 மணி அளவில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து குருசிலாப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.