திருப்பத்தூர்: குற்றங்கள் மற்றும் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஷ்ரேயா குப்தா, உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய மக்கள் அதிகம் கூடும் இடங்கள் நகரப் பகுதி மற்றும் கிராமங்களில் கடந்த (5. 10. 2024 மற்றும் 6. 10. 2024) ஆகிய இரண்டு நாட்களாக போதைப் பொருட்களுக்கு எதிராகவும் குற்றத்தடுப்பு பற்றியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு பற்றியும், பெண்களுக்கான உதவி எண்-181, குழந்தைகளுக்கான உதவி எண்-1098, காவல் உதவி செயலி பற்றியும், இணைய வழி குற்றம் (Cyber Crime Helpline No 1930), போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் கவனத்தை திசை திருப்புதல் ஏமாற்றுதல் (திருடுதல்) போன்ற குற்றங்களை தடுக்க கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி மேற்படி குற்றங்களிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.