திருப்பத்தூர் அடுத்த அகரம் பகுதியை சேர்ந்த கூலன் மகன்கள் முனிரத்தினம் மற்றும் நடராஜன்(57) ஆக இருவரும் 1998 ஆம் ஆண்டு அகரம் பகுதியில் சுமார் நான்கரை ஏக்கர் அளவில் நிலத்தை வாங்கி தனது தந்தை பெயரில் கிரையம் செய்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில் கூலனின் முதன் மகன் ஆன முனிரத்தினம் தனது தந்தையை பார்த்துக் கொள்வதாக கூறி திருவண்ணாமலைக்கு சென்று அழைத்துச் அந்த நான்கரை ஏக்கர் அளவில் சொத்தை தனது பெயருக்கு மாற்றி உள்ளார்.
அதன் பின்பு தந்தையை பராமரிக்காமல் இரண்டாவது மகனான நடராஜன் வீட்டில் விட்டுள்ளார்.
அதன் பின்னர் கூலன் உயிரிழந்த நிலையில் அந்த நான்கரை ஏக்கர் சொத்தும் தனக்கு சொந்தம் என நடராஜன் மீது வழக்கு பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
நடராஜன் தான் ஏமாற்றப்பட்டது அறிந்து தானும் நிலத்தை வாங்க பணம் கொடுத்ததாகவும் மேலும் அந்த நிலத்தில் தனக்கு பங்கு உண்டு மேலும் காலங்காலமாக இந்த இடத்தை தான் அனுபவித்து வருவதாகவும் கூறி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் முனிரத்தினம் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து உள்ளார். அதன் பின்பு அவருடைய மகனான கணேஷ் குமார் கடந்த 2023 ஆம் ஆண்டு சொத்துக்கள் அனைத்தும் தனக்கு சொந்தம் என முனிரத்தினம் பெயரில் இருந்த சொத்துக்களை தனது பெயரில் மாற்றி எழுதியுள்ளார்.