திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்நாள் கூட்டத்தில் முதியவர் தங்களுக்கு மகன்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி ஆட்சியரிடம் மனு. திருப்பத்தூர் மாவட்டம் இருளர் வட்டம் கொல்லக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த இந்திராணி என்பவர் நானும் என் கணவரும் வயதானவர்கள். எனக்கு இரு மகன்கள் சீனிவாசன், இளைய மகன் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் எங்களை வீட்டில் விடாமல் வெளியே படுக்கச் சொல்லி எங்களை அடித்து துன்புறுத்துகிறார்கள். ரோட்டில் போய் படுங்கள் என்று சொல்கிறார்கள். இந்த மனுவின் மீது கருணை வைத்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் இருவரும் மனு அளித்துள்ளனர்.