9 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் முதியவர் கைது

78பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (62 ) இவருக்கு மூன்று ஆண்கள் ஒரு பெண் உள்ள நிலையில் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சண்முகத்தின் மனைவி கணவதி இறந்துவிட்ட நிலையில் சண்முகம் தனியாக வசித்து வந்துள்ளார்.

மேலும் அதே பகுதியை சேர்ந்த வேலன் என்பவரின் மனைவி உமாராணி இவர் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

வேலன் இறந்துவிட்ட நிலையில் உமாராணி தன்னுடைய 9 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் உமாராணியின் 9 வயது குழந்தை இன்று சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அருகே உள்ள சண்முகம் என்பவரின் வீட்டின் அருகில் நெல்லிக்காய் மரத்தில் நெல்லிக்காய் பறிப்பதற்காக சிறுமி சென்றுள்ளார்.

அதனை பார்த்த முதியவர் அந்த சிறுமிக்கு லட்டு தருவதாக கூறி வீட்டிற்குள் அழைத்துள்ளார்.

அதன்பின் சிறுமி வீட்டிற்குள் வந்ததும் வீட்டின் கதவை மூடி விட்டு அந்த சிறுமியிடம் முதியவர் சண்முகம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது சிறுமி கத்தி கூச்சலிடவே முதியவர் கதவை திறந்து உள்ளார்.
அதன்பின் பயந்து போன சிறுமி உடனடியாக ஓடிப்போய் அருகே இருந்த குழந்தையின் சித்தி மகாராணியிடம் நடந்த சம்பவம் குறித்து சிறுமி கூறியுள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி