விஜய் டிவி, சன் டிவி போன்ற சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை நேஹா கவுடா சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் "நான் 4-வது படிக்கையில் என் அம்மாவை தேடி பக்கத்து தெருவிற்கு சென்று தேடிய போது, ஒருவன் என் அப்பாவை தெரியும் என்று ஒரு வாட்ச் கடைக்கு கூட்டிச் சென்றான். அங்கு கதவை சாத்தி மிகவும் மோசமாக நடந்து கொண்டான். ரொம்ப அடிச்சான். அப்புறம் எப்படியோ அவன்கிட்ட இருந்து தப்பிச்சு நான் வெளியே வந்தேன்" என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.