பாட்டுபாடி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்பாட்டம்

71பார்த்தது
திருப்பத்துர் மாவட்டம்

*திருப்பத்தூரில் பாட்டு பாடி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். *

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் அரசு ஊழியர் கூட்டமைப்பு இயக்கங்களின் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருநாவுகரசு தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டு பாடி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதில் முக்கிய கோரிக்கைகளாக

புதிய ஓய்வு ஊதிய திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண், விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை வழங்கிட வேண்டும்,

தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் 90% மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளி கல்வித்துறை அரசாணை எண்; 243 நாள் 21. 12. 23ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக்கோரிக்கைகளை முன்னிறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி