இந்தாண்டு நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கபோகிறது என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மநீம கட்சியின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் உரையாற்றிய கமல், "இப்போது 8-ம் ஆண்டில் நின்றுகொண்டிருக்கிறோம். இந்த வருடம் நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்போகிறது. அடுத்த வருடம் உங்கள் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கப்போகிறது" என்று கூறியுள்ளார். இந்நிலையில், தான் மாநிலங்களவை எம்பி ஆவது உறுதி என கமல்ஹாசன் சூசகமாக தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.