அரசுஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

74பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம்

*திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்*


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் அருள்மொழிவர்மன் தலைமையில் 24 மணிநேர தர்ணா போராட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டு நாளை காலை 10 மணி வரை நடைபெற உள்ளது.

மேலும் இந்த தர்ணா போராட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், அரசு துறையில் உள்ள காலிபணி இடங்கள் அனைத்தையும் கால முறை ஊதியத்தில் நிரப்பப்பட வேண்டும் மற்றும் நிறுத்தப்பட்டுள்ள வருவாய் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணியிடங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி