தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி கரையோரம் உள்ள கொங்கராயகுறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது சட்டநாதர் ஆலயம். இவ்வாலயத்தில் அஷ்ட பைரவர் தனிச் சன்னதியில் அமர்ந்து அருள் பாலிக்கிறார். இவர் 64 பைரவர்களுக்கு சமமானவர். இந்த கோயிலில் வழிபடுபவர்களுக்கு தீராத நோய்கள் தீரும். வியாபாரம் செழிக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். குழந்தை வரம் கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கும். பல நாட்களாக முடியாத வழக்குகள் முடியும் என்பது நம்பிக்கை.