திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் திவாகர் (22) இவர் தன்னுடைய பைக்கில் இன்று காலை திருப்பத்தூர் செல்ல அதிவேகமாக சென்றார். அப்போது காமராஜர் நகர் பகுதியில் பைக் கட்டுப்பாட்டை இழந்து சுவர் மீது மோதி அருகே உள்ள கால்வாயில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்றிருந்த திவாகர் சிகிச்சை பலனின்றி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாலிபர் அதிவேகமாக பைக்கில் சென்று சுவரில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.