ஏழருவி புதுப்புங்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிராமிய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து சென்ற காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி மகன் குணமணி (33) 20 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. குணமணியை பிடிக்க முயற்சி செய்தபோது உதவி ஆய்வாளரை கீழே தள்ளிவிட்டு குணமணி கையில் வைத்திருந்த ஸ்பூனால் இடது கையால் குத்தியுள்ளார்.
இதனால் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் என்பவருக்கு இடது உள்ளங்கையில் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் கஞ்சா வைத்திருந்த குணமணியை கைது செய்து அவரிடம் இருந்த 20 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கஞ்சா வைத்திருந்த நபரை பிடிக்க முயற்சி செய்த உதவி ஆய்வாளரை ஸ்பூனால் மற்றும் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.