சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி நடைபெற உள்ள சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் எப்போதும் போல பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சம அளவில் ஒத்துழைக்கும். மேலும், பிட்ச் மந்தமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இரண்டு அணிகளும் நிச்சயமாக இரண்டு அல்லது மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பிளேயிங் லெவனில் ஆட வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு துவங்கும்.