திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் பேருந்து நிலையம் மட்டுமல்லாது ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் என பல்வேறு இடங்களில் இன்று தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் குறித்த தகவலை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக சின்னத்திரை மற்றும் பெரிய திரைகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.
ஆனால் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட ஒரு இடத்தில் கூட பொதுமக்கள் அந்த பட்ஜெட் தாக்கல் சம்பந்தமான தகவலை அறிந்து கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் திருப்பத்தூர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு இடத்தில் கூட பொதுமக்கள் வராமல் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து இடங்களிலும் நாற்காலிகள் காலியாக இருந்ததை பார்க்க முடிந்தது.
இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில் தமிழக அரசு தன்னுடைய கடைசி பட்ஜெட் தாக்கல் தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழக முழுவதும் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்தது இதற்கான ஏற்பாடுகளுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டதோ அவ்வளவு வீண் செலவு ஏன் என்றால் மக்கள் பொது இடங்களில் பட்ஜெட் தாக்கல் கண்டு களிக்க ஆர்வம் காட்டவில்லை அனைத்து இடங்களும் பந்தல்கள் காலியாக இருந்தன என்கிற குற்றச்சாட்டை முன் வைத்தனர்.