உயிர்பலி வாங்க காத்திருக்கும் சிதலமடைந்த உயர் மின் அழுத்தம்

68பார்த்தது
குனிச்சி அருகே உயிர் பலி வாங்க காத்திருக்கும் சிதலமடைந்த உயர் மின் அழுத்த மின்கம்பம்! உயிர் பலி ஏற்படுவதற்கு முன்பு மின் கம்பத்தை மாற்றுவார்களா? துறை சேர்ந்த அதிகாரிகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு!


திருப்பத்தூர் அடுத்த குணிச்சி மின் வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட வக்கீல் அய்யர் தோப்பு பகுதியை சேர்ந்த விவசாயி பன்னீர் இவரது கிணற்றின் அருகில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் உயர் மின் அழுத்தம் கொண்ட மின் கம்பம் உள்ளது அந்த மின் கம்பம் அடிப்பகுதியில் மிகவும் மோசமான நிலையில் சிதலமடைந்து எந்த நேரத்திலும் விழும் அபாய நிலையில் உள்ளது!

மழைகாலம் என்பதால் காற்றின் வேகத்தில் முறிந்து விழுந்து உயிர் பலி வாங்க காத்திருக்கின்றது

இந்த மின் கம்பத்தின் அருகில் அரசு பள்ளிக்கு செல்லும் வழியாகவும் மற்றும் கலை கல்லூரிகளுக்கு செல்லும் வழியாகவும் மற்றும் பல்வேறு குக் கிராமங்களுக்கு செல்லும் வழியாகவும் திகழ்ந்து வருகின்றது

உடனடியாக பொதுமக்களின் நலன் கருதி உயிர் பலி வாங்கும் முன்பு உடனடியாக சிதலமடந்த மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி