திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வாசல் எதிரே திருப்பத்தூர் வாணியம்பாடி முக்கிய சாலை பகுதியில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து சென்று கொண்டிருக்கின்ற நிலையில் அந்த சாலை ஓரமாக உள்ள குப்பை மற்றும் கால்வாய் இருக்கும் இடத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து நகர காவல் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர காவல் துறை அடையாளம் தெரியாத வட மாநில வாலிபர் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் கடந்த 10 நாட்களாக அந்தப் பகுதியில் மது போதையில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்து வந்தார் என்பதும் நேற்று இரவு வரை கூட மது போதையில் நடமாடிக் கொண்டிருந்தார் என்பதும் திடீரென இன்று காலை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்க்கும் பொழுது பேச்சு மூச்சற்று அந்த நபர் படுத்து இருந்ததை கண்டு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் தெரிய வந்தது.