தீண்டாமை எண்ணத்தில் செயல்படும் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க மனு.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் வெளக்கல் நத்தம் ஊராட்சி பையானபள்ளி கிராம ஆதி திராவிட காலனி மக்கள் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் கழிவுநீர் கால்வாய் இல்லாத காரணத்தால் மிகவும் துர்நாற்றம் வீசிக்கொண்டு வருவதை அடுத்து சாக்கடை கழிவு கால்வாய் அமைத்து தர வேண்டி 50க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மனு அளிக்க வந்தனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில் வன்னியர் சமூகத்தை சார்ந்தவர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பதால் எங்களுக்கு எந்த ஒரு நல திட்டங்களையும் செய்ய மறுப்பதாக குற்றம் சாட்டினர். மேலும் இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை விடுத்த போது தீண்டாமை எண்ணத்தில் எங்களின் பிரச்சினைகளை கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து பல்வேறு முரண்பட்ட காரணங்களை கூறி கோரிக்கைகளை மறுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.