3 மாத பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு.

82பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம்


*திருப்பத்தூரில் மூன்று மாத பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு போலீசார் விசாரணை*
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அபாய் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(30) என்பவர் டீக்கடையில் வேலை செய்து வருகிறார் அவரது மனைவி சுகந்தி (21) இருவருக்கும் திருமணம் ஆகி 5 வருடம் ஆன நிலையில்

ஏற்கனவே இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளன
இதனை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு முன்பு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இன்று குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பின்னர் தனியார் மருத்துவ சிகிச்சை பார்த்துக்கொள்கிறோம் எனகூறி குழந்தையை மருத்துவமனையில் இருந்து அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

குழந்தை தனியார் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் மூன்று மாத பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்துள்ளது என அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பத்தூர் நகர போலீசார் மூன்று மாத பெண் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மூன்று மாத பெண் குழந்தை மர்ம காய்ச்சலால் உயிர் இழந்ததா இல்லை வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி