*திருப்பத்தூரில் 1 கோடியே 30 லட்சம் மதிப்பில் போலி நகைகளை வைத்து மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளர் கைது*
திருப்பத்தூர் மாவட்டம் கருப்பனூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (42) இவர் காந்திபேட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார்.
அப்போது இவர் கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 42 வங்கி கடன் வாடிக்கையாளர்கள் கணக்குகளில் சுமார் 200 சவரன் போலியாக நகைகளை வைத்து 1 கோடியே 30 லட்சம் மதிப்பில் பண மோசடி செய்துள்ளார்.
இதனை அறிந்த மாவட்ட முன்னோடி வங்கி முதன்மை மேலாளர் ராஜன் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் நகர போலீசார் பாஸ்கரனை கைது! செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.