CSK - MI போட்டி நடைபெற உள்ள நேரத்திற்கு முன்பாக மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று (மார்ச் 23) மாலை 5 மணிக்கு 34%-மும், மாலை 6:00 மணிக்கு 23%மும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. இது மிகக் குறைவான வாய்ப்புதான். எனவே பெரியளவில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. ஒருவேளை மாலை 6 மணி அளவில் மழை பெய்தாலும், ஆடுகளம் ஈரமாக இருக்கும் என்பதால் அரை மணி நேரம் போட்டி தாமதமாக துவங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.