திருப்பத்தூர்: 60 அடியில் தண்ணீர்..பொதுமக்கள் ஆச்சரியம்

53பார்த்தது
திருப்பத்தூர் ரயில் நிலையம் அடுத்த ராஜீவ் காந்தி நகர் அருகே உள்ள சுமார் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பாக சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓடுதளம், நீச்சல் குளம், இறகு பந்து விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் நவீன விளையாட்டு அரங்கம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டது. 

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு வடதுறை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இவ்வளவு பெரிய மதிப்பீட்டில் நவீன விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான அடிப்படைத் தேவையான தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதேபோல் ஆயிரம் அடி தோண்டினாலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் எங்கும் தண்ணீர் கிடைக்காத சூழ்நிலையில் நவீன விளையாட்டு அரங்கம் கட்டப்படும் வறண்ட பூமியில் ஆழ்துளைக் கிணறு போடும் பணி துவங்கியபோது 60 அடியில் தண்ணீர் பீச்சி அடித்ததால் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். துறை சார்ந்த அலுவலர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில் சுமார் 40 வருடங்களாக இந்த அளவுக்குக் குறைவான அடி ஆழத்தில் தண்ணீர் வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி