மௌஞ்சாரோ (Mounjaro) ஊசி இன்சுலினோட்ரோபிக் பாலிபெப்டைட் (GIP) மற்றும் குளுகோகன் போன்ற பெப்டைட்-1 (GLP-1) receptors-களின் மூலம் பசியை கட்டுப்படுத்துகிறது. மேலும், உணவு சாப்பிட்ட பிறகு அதனை செரிமானம் செய்வதற்கான ஹார்மோன் சுரப்பியை அதிகரிக்கவும் செய்கிறது. இதன் மூலம் ஒருபக்கம் பசி கட்டுப்படுத்தப்படுவது மட்டுமின்றி மறுபக்கம் உணவை விரைந்து செரிமானம் செய்வதன் மூலம் உடல் எடை ஆட்டோமேட்டிக்காக கட்டுப்படுத்தப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.