கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

65பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகம் எதிரில்
தமிழகத்தில் 25 ஆயிரம் கேபிள் டி. வி. ஆபரேட்டர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு அரசு கேபிள் டி. வி. நிறுவனம் 2 லட்சம் பாக்ஸ்களை கொள்முதல் செய்து உள்ளது. இதையடுத்து அரசு கேபிள் டி. வி. அதிகாரிகள் தனியார் பாக்ஸ்களை எடுத்து விட்டு ஒட்டு மொத்தமாக அரசு பாக்சை வாங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். இதனை ஏற்க மறுத்தால் புதியவர்களிடம் ஒளிபரப்பு கொடுத்து நெருக்கடியை உருவாக்குகின்றனர். இதனால் ஆபரேட்டர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி