திருப்பத்தூரில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

66பார்த்தது
திருப்பத்தூரில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மாநில மையம் சார்பாக ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைத்திட வேண்டி ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி அரசு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மாநில மையம் சார்பாக மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 208 ஊராட்சிகளில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி முதற்கட்டமாக அரசின் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முறையான கால முறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவாளர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலாளருக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி ஏப்ரல் 4ம் தேதி சென்னை ஊரக வளர்ச்சி துறை ஆணையம் முன்பு பெருஞ்திறல் முறையீடும் அதே போன்று ஏப்ரல் 21 ஆம் தேதி காத்திருப்பு போராட்டமும் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி