சென்னை ஆலந்தூரில் ஐடி பெண் ஊழியர் லாரி சக்கரத்தில் சிக்கி தலை சிதைந்து பலியானார். கடலூர் அரிசிப் பெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் நித்யா, இவர் தோழி ஹரிணியுடன் 7ஆம் தேதி இரவு, ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தில்லை கங்காநகர் சுரங்கப்பாலத்தின் அடியில் தேங்கி இருந்த கழிவுநீரில் ஸ்கூட்டர் வழுக்கியதால் கீழே விழுந்தனர். நித்யாவின் தலையில் பின்னால் வந்த மினி லாரி சக்கரம் ஏறியதில் ஹெல்மெட் கழண்டு ஓட தலை சிதைந்து பலியானார்.