அரசின் விமான நிறுவனமாக செயல்பட்ட 'ஏர் இந்தியா' தனியார் விமான நிறுவனங்களின் வருகையால் நஷ்டத்தை சந்திக்கத் தொடங்கியது. அதன் நஷ்டம் ரூ.70,000 கோடியை எட்டிய நிலையில், ஏர் இந்தியாவை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து ஏர் இந்தியாவை ரூ.18,000 கோடிக்கு டாடா குழுமம் வாங்கியது. இதன்மூலம், 68 ஆண்டுகளுக்கு முன் டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா, மீண்டும் அந்நிறுவனம் வசமே வந்தது.