

தக்கோலம் பேரூராட்சி மாதாந்திர கூட்டம்
தக்கோலம் பேரூராட்சி மாதாந்திர கூட்டம் இன்று நடைபெற்றது. தலைவர் நாகராஜன் செயல் அலுவலர் மாதேஸ்வரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் லாவண்யா பேசுகையில், அதிமுக வார்டுகளில் சாலை அமைத்தல் உள்ளிட்ட எந்தவித அடிப்படை பணிகளும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். அதற்கு பேரூராட்சி தலைவர், வார்டுகளில் செய்யப்பட்டுள்ள பணிகளின் விவரம் தங்களுக்கு வழங்கப்படும் என்றார்.