
நெமிலியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1986-87 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களின் ஐந்தாம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில், சந்திராயன் 3 விஞ்ஞானி, அப்துல் ஹமீது மற்றும் சமூக ஆர்வலர் தாமோதரன், அதிமுக பேரூராட்சி கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது பள்ளி பருவ நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர்.