வங்கி ஏடிஎம்மில் பணம் வழிப்பறி முயற்சி தப்பியது 36 லட்சம்

50பார்த்தது
*கோடியூர் வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்தவர்களிடம் வழிப்பறி முயற்சி தப்பியது ரூ. 36 லட்சம்*


திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே கோடியூர் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் அந்த ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக பணத்துடன் பாதுகாப்பு வாகனத்தில் வங்கி ஊழியர்கள் வந்தனர். வாகனத்தை ஏடிஎம் மையம் முன்பு நிறுத்தி விட்டு ஒரு பையில் ரூ. 36 லட்சத்துடன்
ஏடிஎம் மையத்துக்கு நுழைய முயன்றனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத நேரத்தில் இவர்களை பின் தொடர்ந்து மொபெடில் வந்த இரு வாலிபர்களில் ஒருவர் முகத்தை மறைத்தவாறு பணப்பையை பறித்துக்கொண்டு மொபெடில் தப்ப முயன்றனர்.

அப்போது அவ்வழியாக வந்த பைக் மீது மொபெட் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பணப்பை துாக்கி வீசப்பட்டது. உடனே வங்கி ஊழியர்கள் அந்த பணப்பையை மீட்டனர்.

மேலும் இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே மர்ம வாலிபர்கள் இருவரும் மொபெட்டை அதே இடத்தில் விட்டுவிட்டு ஒரே திசையை நோக்கி இருவரும் தப்பி ஓடினர்.

அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை விரட்டி பிடிக்க ஓடினர் அதற்குள் இருவரும் மாயமானார்கள். இது குறித்து வங்கி ஏடிஎம் ஆப்ரேட்டர் தண்டபாணி கொடுத்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி