திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாவிற்கு வருவது வழக்கம்
இந்த நிலையில் ஏலகிரிமலை
முத்தானூர் கிராமத்தை சேர்ந்த லேட் பச்சையப்பனின் மனைவி காந்தா (73) அவருடைய நிலத்தில் தனிமையில் வசித்து வருகிறார்.
மூதாட்டிக்கு நான்கு பிள்ளைகள் இருந்த நிலையில் ஒருவர் இறந்து விட்டார் மூன்று பிள்ளைகளும் ஏலகிரி மலை அத்தனாவூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு மூதாட்டி காந்தா தனிமையில் இருப்பதை நோட்டம் பார்த்து வீட்டில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் காந்தாவை கழுத்தை நெரித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த 2சவரன் தங்க நகை, அவர் காலில் அணிந்திருந்த வெள்ளி காப்பு மற்றும் LED TV உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மேலும் மூதாட்டியின் பேரன் ஜெகன் நிலத்தில் உள்ள பாட்டியை பார்ப்பதற்கு காலை சென்றுள்ளார் அவர் பார்த்த போது
காந்தா இறந்த நிலையில் உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏலகிரி மலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.