5,700 ஆண்டுகளுக்கு ரீசார்ஜ் செய்யத் தேவையின்றி இயங்கும் பேட்டரியை ப்ரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கார்பன் 14 என்ற மூலக்கூறில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சில் இருந்து இந்த பேட்டரி தயாரிக்கப்படுகிறது. மனிதர்கள் கதிர்வீச்சால் பாதிக்காமல் இருக்க, அதனைச்சுற்றி வைரம் பதிக்கப்படுகிறது. ஆனாலும், இந்த பேட்டரி குறித்த ஆய்வு இன்னும் ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளது.