அரக்கோணம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் இன்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதி மற்றும் திருத்தணி செல்லும் விரைவு மற்றும் மின்சார ரயில்களில் ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதற்காக பிளாட்பாரம் ஓரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் சரஸ்வதியிடம் அரிசியை ஒப்படைத்தனர்.