
மல்லங்குப்பம்: விளையாட்டு உபகரணங்கள் அர்ப்பணிப்பு
மல்லங்குப்பம் ஊராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அர்ப்பணிப்பு.திருப்பத்தூர் மாவட்டம் நாட்டாம்பள்ளி அடுத்த மல்லங்குப்பம் ஊராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள காட்சிப்படுத்தப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் நிர்மலா சிவகுமார் தலைமையில் இளைஞர்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் வெங்கடேசன், வார்டு உறுப்பினர்கள் பிரியா உமாசங்கர், ராதிகா சரவணன், பாலம்மாள் பழனிச்சாமி, இராஜேஸ்வரி, ஊராட்சி செயலாளர் சீனிவாசன் மற்றும் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், கிராமம் மக்கள் கலந்துகொண்டனர்.