திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பார்சம்பேட்டை பகுதியில் உள்ள முதியவர் இல்லத்தை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி பேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இல்லத்தில் காப்பாளர்களிடம் கேட்டதற்கு 50 முதியவர்கள் இருப்பதாகவும், மேலும் ஒவ்வொரு முதியவரிடமும் ஆட்சியர் நல்ல முறையில் கவனித்துக் கொள்கிறார்களா, உணவு சரியாக வழங்கப்படுகிறதா, ஏதாவது குறைகள் இருக்கிறதா என்பதையும் அங்கு அவர்களிடம் கேட்டறிந்தார். உடல்நிலை குறைவு ஏற்பட்டால் ஒவ்வொரு பாரமும் மருத்துவர்கள் இருப்பிடங்களுக்கு வந்து பரிசோதனை செய்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.