திருப்பத்தூர்: சுதந்திர தின விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஆட்சியர்

83பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலையார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாடுவது வழக்கம்

இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள இந்திய நாட்டின் 76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அமர இட வசதிகள் சரியாக அமைக்கப்பட்டுள்ளனவா என்றும் மேலும் நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது கோட்டாட்சியர் ராஜசேகர், திருப்பத்தூர் வட்டாட்சியர் நவநீதம், மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி