நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணை இன்று (பிப்.17) நடந்தது. இதில், 2008ஆம் ஆண்டு மதுரை கோயிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். 2008ஆம் ஆண்டு முதல் பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியை சீமான் தொடர்பில் இருந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்ததால், 2 முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ளார் என இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.