சென்னையில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. விடியல் பயணம் மூலம் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக, வருவாய் குறைவான பேருந்துகளை மகளிர் கட்டணமில்லா பேருந்துகளாக மாற்றப்பட உள்ளது. அதன்படி, 174 மாநகரப் பேருந்துகள் (சிவப்பு நிற Express பேருந்துகள்) விடியல் பயணத் திட்டப் பேருந்துகளாக மாற்றப்பட உள்ளன. விரைவில் தமிழ்நாடு முழுவதும் இந்நடைமுறை அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.