திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கல்நார்சம்பட்டி பகுதியில் கண்ணியன் என்பவருக்கு சொந்தமான நிலங்களை பிரித்து அனைத்தும் சுமார் 38 பேருக்கு விற்பனை செய்துவிட்டு வெளியூர் சென்று விட்டார்.
அந்த இடத்திற்கு முறைப்படி பத்திர பதிவு செய்யாமல் 50 ரூபாய் பாண்டு பத்திரங்களில் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதில் 6 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் வாங்கி வைத்திருந்தார்.
இந்த நிலையில் அந்த மனையை கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியில் சேர்ந்த மஞ்சுநாதன் எனவருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு 50 ரூபாய் பாண்டு பத்திரத்தில் எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மஞ்சுநாதன் உடைய அக்கா மகன் பிரபு என்பவருக்கு குடியிருக்க வீடு இல்லாததால் அதில் வீடு கட்டிக் கொள்ளும்படி மஞ்சுனாதன் கூறியதாக தெரிகிறது. மேலும் அந்த இடத்திற்க்கு பட்டா வாங்கி தர கூறி சிவாஜி என்பவரிடம் ரூபாய் 2 லட்சம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரபு வீடு கட்டுவதற்காக பணிகள் தொடங்கியுள்ளார் அப்போது அங்கு வந்த சிவாஜி பட்டா வராமல் வீடு கட்ட கூடாது என்று பணிகளை தடுத்து நிரிதியதாக தெரிகிறது.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில்
சிவாஜி என்பவர் பிரபுவின் மனைவி கஸ்தூரி மற்றும் அவருடைய உறவினர் சத்யா ஆகியோரை பெரம்பால் அடித்ததாகவும் தெரிகிறது.