திருப்பத்தூர் மாவட்டம், நாடறம்பள்ளி மேற்கு ஒன்றியம், கே. பந்தாரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க. தேவராஜி எம்.எல்.ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் நாடறம்பள்ளி ஒன்றிய குழுத் தலைவர் வெண்மதி சிங்காரவேலன், மாவட்ட பிரதிநிதி சசிகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தன், சௌந்தரபாண்டியன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஜெயாசரவணன், தேசிங்கராஜா, சங்கராபுரம் குமார், கிளைக்கழக நிர்வாகிகள் செல்வம், கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.