திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஏழரைப்பட்டி பகுதியில் பொதுவழியை தனி நபர் ஆக்கிரமித்து உள்ளதாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் திருப்பத்தூரில் இருந்து நாற்றம்பள்ளி செல்லும் வழியில் ஏழரைப்பட்டி பகுதியில் பொதுமக்கள் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாட்றம்பள்ளி இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதின் பேரில் அங்கிருந்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.