முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பதக்கங்களோடு திரும்பும் அனைத்து மாணவ செல்வங்களையும் வரவேற்க மேடையில் உள்ள அத்தனை ஆளுமைகளும் காத்திருக்கிறோம். ஜோலார்பேட்டையில் நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பெருமிதம்*
திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக கடந்த 10ம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இந்த போட்டியில் பள்ளி கல்லூரி பொது பிரிவு அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஐந்து பிரிவுகளில் 32 வகையான போட்டிகள் நடைபெற்றதில் சுமார் 25 ஆயிரம் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு அதில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 2500 வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் பதக்கம் வழங்கும் விழா திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி பகுதியில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கி தொடர்ந்து மேடையில் பேசிய மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு மற்றும் பதக்கங்களை வென்று திரும்பும் வீரர் வீராங்கனைகளை இந்த மேடையில் அமர்ந்துள்ள அத்தனை ஆளுமைகளும் வரவேற்க தயாராக இருக்கிறோம் என்று பெருமிதத்துடன் பேசினார்.