எஸ்.சி, எஸ்.டி நலக்கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தர்மலிங்கம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் நூறுகணக்கில் உள்ளன. இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ - மாணவிகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் இலவச கல்வி உதவித்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, அதை பரிசீலினை செய்து மாணவர்களுக்கு சேர வேண்டிய இலவச கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.