திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே மழையின் காரணமாக மழை நீர் தேங்கியுள்ளதால் அவ்வழியாக செல்லக்கூடிய இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தினம் தோறும் வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் பேருந்துகள் சென்று வருவது வழக்கம் இந்நிலைகளில் மழை தண்ணீர் போவதற்கு வழி இன்றி சுமார் 5 அடி அளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி உற்று வருகின்றனர். உடனடியாக நகராட்சி பணியாளர்கள் இதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.