வேரோடு சாய்ந்த நூறு வருடம் பழமையான புளியமரம்

54பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பார்சல் ஊராட்சி சிவசக்தி நகர் பகுதியில் திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலை ஓரமாக சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த புளியமரம் இருந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூரில் இருந்து புதுப்பேட்டை வரை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக புளிய மரத்தின் அருகாமையில் குழி தோண்டி குழாய்கள் பொருத்தும் பணி நடைபெற்றதாலும் சாலை விரிவாக்க பணி நடைபெற்றதாலும் புளிய மரத்தின் வேர்கள் துண்டிக்கப்பட்டு பலம் இழந்து நின்று கொண்டிருந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களாக கன மழை பெய்ததின் காரணமாக ஏற்கனவே மரத்தின் ஓரத்தில் குழிகள் தோண்டப்பட்டு மரத்தின் வேர்கள் பிடிப்பு இல்லாமல் இருந்ததால் பழமை வாய்ந்த புளியமரம் திடீரென வேரோடு சாய்ந்து குடியிருப்பு பகுதிகளின் தெருவில் விழுந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி