வேலூர்: குறைத்தீர்நாள் கூட்டம் - 364 மனுக்கள்

82பார்த்தது
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று (செப்.,30) நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கி மனுக்களை பெற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தனித்துணை ஆட்சியர் பெலிக்ஸ்ராஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் குடிநீர் வசதி, சாலைவசதி, கடனுதவி, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 364 மனு அளித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ. 1 லட்சத்து 61 ஆயிரத்து 600 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி