பைப்லைன் உடைந்தில் லட்சக்கணக்கான லிட்டர் வெளியேறி வருகிறது

51பார்த்தது
வாணியம்பாடியில் குடிநீர் பைப் லைன் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி, அம்பலூர் பகுதிகளில் இருந்து குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பைப் லைன் அமைத்து வாணியம்பாடி புதூர், முஸ்லீம்பூர், கொல்லதெரு, கோவிந்தாபுரம், நூருல்லாபேட்டை உள்ளிட்ட பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யபட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆற்றுமேடு பகுதியில் பாலாற்றின் கிளையாற்றின் வழியாக செல்லும் குடிநீர் பைப்லன் உடைந்துள்ளது. இதன் காரணமாக அதிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறி அங்கு கழிவுநீ ரில் கலந்து குளம் போல் தேங்கியுள்ளது.

நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி