செங்கம்: அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், செங்கம் பேரூராட்சி அதிமுக சார்பில், 40-மாத காலமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்கு காரணமான திமுக அரசை கண்டித்தும், மக்கள் நலன் கருதி உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் செங்கம் பேரூராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி. எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மதுக்கூர். துரைசெந்தில் கண்டன உரையாற்றினார். , இந்த போராட்டத்தில், செங்கம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் மகரிஷி மனோகரன், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்பணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், ஒன்றிய சார்பணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், கிளை கழகசெயலாளர், மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.