திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கலசபாக்கம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில், உறுப்பினர் உரிமைசீட்டு வழங்குதல் குறித்தும், வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நம்முடைய பகுதியில் ஆற்ற வேண்டிய மக்கள் நலப்பணிகள் குறித்தும், கழகத்தில் புதிய இளைஞர்கள் சேர்த்தல் குறித்தும் அதிமுக செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் கேசவபுரம் பகுதியில் நடைபெற்றது.
இதில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி. எஸ் எஸ். கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பொறுப்பாளர், மதுக்கூர் துரைசெந்தில் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்பணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், ஒன்றிய சார்பணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், கிளை கழகசெயலாளர், மற்றும் நிர்வாகிகள், முன்னாள், இன்னாள், உள்ளாட்சி கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.