திருவண்ணாமலை மாவட்டம், போளூர் டவுனில் நேற்று (அக்.,6) லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவர்கள் கலந்து கொண்டு பல்வேறு கிராமங்களில் இருந்து கண் பார்வை குறைபாடு மற்றும் கண் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து சிகிச்சை அளித்தனர். மேலும் ஆலோசனைகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.